இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல வங்கி

Summarize this blog post with:
  • இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது.
  • மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது.
  • அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
  • இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வங்கியில் 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள்.
  • இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் சிட்டி பேங்க் இயங்கி வருகிறது.
  • தற்போது இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக ‘சிட்டி பேங்க்’ தெரிவித்து இருக்கிறது.
  • இந்நிலையில் சிட்டி பேங்க் குழுமம் அமெரிக்காவை தவிர்த்து லண்டன்,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் சந்தைகளில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது .
  • நாங்கள் வெளியேற மட்டும் தான் செய்கிறோம், சேவைகளை நிறுத்தப்போவதில்லை என்று சிட்டி பேங்க் கூறியுள்ளது.
  • இதனால் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறது.
  • இந்த கூற்றின்படி, சிட்டி பேங்க் வேறு யாரிடமாவது வங்கியை விற்கும் என தெரிகிறது.
  • சிட்டி பேங்க் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளோம் என்று கூறினாலும், எப்போது வெளியேறப்போகிறார்கள் என்று கூறவில்லை.
gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.