கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, நிறுவனங்கள் எந்த இடையூறுகளும் இன்றி, வங்கிகளில் குறிப்பிட்ட கடன் தொகையை வாங்கி கொள்ள முடியும்.

அவசர கால கடன் வழங்கும் நிறுவனங்கள்

  • 12 பொதுத் துறை வங்கிகள்
  • 24 தனியார் துறை வங்கிகள்
  • 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

இந்நிலையில், மத்திய அரசு இந்த அவசரகால திட்டத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயணம் மற்றும் சுற்றுலா, விருந்தோம்பல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது . இந்த திட்டமானது 3 லட்சம் கோடி ரூபாய் கடன் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அவசர கால கடன் உதவி திட்டத்திற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.

See also  புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு