தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

letter

இந்த அறிவிப்பில், ஆயுதப்படை போலீஸ் ஐஜிபி-யாக இருந்த ஜெ.லோகநாதன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த எம்.டி. கணேஷ்மூர்த்தி ஹெட் குவார்ட்டர்ஸ் ஐஜிபியாகவும், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த எம்.ராஜராஜன் காவலர் தேர்வு பள்ளியின் எஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 8-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக இருந்த டி.பி.சுரேஷ்குமார் திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்படுவதாகவும், காவலர் தேர்வு பள்ளியின் எஸ்பியாக இருந்த எஸ்.செந்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் ஆக நியமனம் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

See also  பொங்கலை தொடர்ந்து குறைந்துவரும் தங்கத்தின் விலை