மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய துறையில்  களப்பணிக்காக உருவாக்கப்பட்ட 5000
கேங்மேன் பணிகளுக்கு 2019ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள்  உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், புதிய
பணியாளர்கள் தேர்வு செய்யக் கூடாது என்றும்  உத்தரவிட்டு இருந்தார்கள்.

பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள்
நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதிதாக கேங்மேன் இடங்களை நிரப்ப
வேண்டும் என்று கூறினார்கள். மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான உத்தரவை ரத்து
செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர்
விஜய் நாராயண் அனைத்து விதிகளும் பின்பற்றபட்டதாக கூறினார். மேலும் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட 70 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறினார்.

மேலும் புதிதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்தப் பணியாளர்கள்
தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார் .

இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குஅனுமதி வழங்கியுள்ளது .

See also  சென்னை NIELIT நிறுவனத்தில் 10th, ITI, Diploma, Graduate படித்தவர்களுக்கு வேலை!