பூண்டு இதய பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும்!

Summarize this blog post with:

ஹைலைட்ஸ்:

  • பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது.
  • பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
  • பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது.

நம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. பூண்டு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது.

பூண்டை நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் நம் உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால் பூண்டில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், சீனா ஆகிய நாடுகளிலும் எல்லா வகை உணவுகளிலும் பூண்டை சேர்த்து கொள்கிறார்கள்.

தினமும் பூண்டை பயன்படுத்தி வந்தால், சளி குறைந்துவிடும். மேலும் பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் சுவாச பாதையில் ஏற்படும் தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்கிறது. தொண்டையில் ஏற்படும் எரிச்சல்களையும் குணப்படுத்துகிறது. மேலும் பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.

பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது. பூண்டில் உள்ள சல்பர், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

அதேபோல் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்குகிறது. பொதுவாக பூண்டு இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பூண்டில் அடங்கியுள்ள விட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

குறிப்பாக தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை, பூண்டில் அதிகம் உள்ளது. தினமும் பூண்டை சாப்பிட்டு வந்தால், நமக்கு ஏற்படும் பல வகையான புற்றுநோய்களை தடுக்கலாம்.

பச்சை பூண்டில் சாறு எடுத்து குடித்தால், படர்தாமரை, படை மற்றும் மூட்டப்பூச்சி கடி ஆகியவற்றினால் ஏற்படும் அரிப்பு உடனடியாக குறையும்.

பச்சையாக பூண்டை வெறும் வயிற்றில் உண்டால், அது நம் உடலில் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பூண்டு மற்றும் கிராம்பை நசுக்கி நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் வைத்தால், பல் வலி குறைந்துவிடும். பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பி, வலி நிவாரணி குணங்களை அடங்கியுள்ளது.

நாம் தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக பற்களில் மென்று சாப்பிட்டால், பூண்டில் உள்ள அனைத்து பலனை நாம் பெறலாம்.

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.