Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம் | Gayatri Mantra in tamil

நம் மனதில் நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் வாழ்க்கை சுகமாகும் சந்தோஷமாகவும் நான் கிடைக்க தினந்தோறும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம் தினசரி காயத்திரி மந்திரத்தை உச்சரிப்பதால் அதிர்ஷ்டம் சித்திகளும் கைக்கூடி வரும் சகல ஐஸ்வர்யங்களும் மனநிம்மதி கிடைக்கும் என்பது பலர் என்பதையும் பலரும் அனுபவபூர்வமாக உணர்ந்து உள்ளன.

காயத்ரி என்பதன் பொருள் தன்னை ஜேவிப் அவர்களை காப்பாற்றுவது என்பது பொருளாகும். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும் மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
காயத்ரி மந்திரத்திற்கு சாவித்ரி மற்றும் சரஸ்வதி என்ற பெயரும் உண்டு இந்த மந்திரத்தை காலையில் காயத்ரி க்காகவும் நடுப்பகலில் சாவித்ரி க்காகவும் மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதியாகவும் ஜெபிக்க படுகின்றது.

காயத்தின் காயத்ரி மந்திரத்தை உறவின் மூலம் உபதேசம் பெற்று ஜெபிக்கலாம் காயத்ரி மந்திரத்தை ஜெபி பவர்கள் அவர்கள் ஒழுங்கு நெறியுடன் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்.

Table of Contents

காயத்ரி மந்திரம் சாவித்ரி மந்திரம்

ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

இது அனைவருக்கும் பொதுவாக காயத்ரி மந்திரம் என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்று பெயர். இது 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம் தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவம் அகலும் சக்திகள் அதிகரிக்கும் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகலும். எனவே தெரிந்து பாவம் செய்து விட்டால் காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்கும்.

விநாயகர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹ
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம்

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

கணவன் மனைவி ஒற்றுமை தரும் ஜானகிதேவி காயத்ரி மந்திரம்

ஓம் ஜனகனாயை வித்மஹே
ராம பிரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரசோதயாத்

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

ஸ்ரீ அனுமன் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம்

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹ
தந்நோ கருட ப்ரசோதயாத்

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

ஸ்ரீஅன்னபூரணி – காயத்ரி மந்திரம்

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

குபேரன் காயத்ரி மந்திரம்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம்

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

காலபைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

பாலா காயத்ரி மந்திரம்

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தந்நோ கந்யா ப்ரசோதயாத்

வருண காயத்ரி மந்திரம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

நவ கிரக காயத்ரி மந்திரங்கள்

நவ கிரக தோஷங்கள் நீங்க நவ கிரக காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கலாம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேதுவிற்கு ஏற்ற காயத்ரி மந்திரங்களை ஜெபிக்கலாம்.

நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

சூரிய காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹ
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக (செவ்வாய் )காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

புதன் காயத்ரி மந்திரம்

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

குரு காயத்ரி மந்திரம்

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்ர காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சனி காயத்ரி மந்திரம்

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

ராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க அதிகாலை நேரம் சிறந்ததாகும். இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன்பு உச்சரிக்க வேண்டும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும்
மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக்
மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

நம் உற்சாகமும் மன நிம்மதி கிடைக்கும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் மனதிலுள்ள உடலிலுள்ள உற்சாகம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் மனமும் சிந்தனையும் தெளிவடையும் இறைவன் ஆசி கிடைக்கும் கோபம் எங்கும் மன அமைதியும் தீய எண்ணங்கள் நீங்கி நல்லதை மட்டுமே மனம் நினைக்கும்.

தினமும் குறைந்தது 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும் உடலும் உள்ளமும் தூய்மையான குழந்தைகளும் வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.