• விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவருடைய நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்து இருக்கிறார்.
  • அந்த நிலத்தில் தற்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் கிடைத்துள்ளது.
  • தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் எந்த வருமானமும் வராததால் அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் நரசிங்காவிற்கு விற்பனை செய்து இருக்கிறார்.
  • நிலத்தை வாங்கிய நரசிங்கா ஒரு வாரத்திற்கு பிறகு நிலத்தை ஜேசிபி எந்திரம் வைத்து சமப்படுத்தி இருக்கிறார்.
  • அப்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் அந்த நிலத்தில் கிடைத்துள்ளது.
  • இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த புதையலை பார்ப்பதற்காக திரண்டு வந்தார்கள்.
  • மேலும் அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கப் புதையலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.