12

பனிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வு தேர்தலுக்கு பிறகு நடத்த அரசு முடிவு

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அடுத்தபடியாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு 1 முதல் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது. ஆனால் 9 ,10 மற்றும் 11 மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்று கூறப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு சட்ட மன்ற தேத்தலுக்கு பிறகு தடத்த அரசு முடிவு செய்துள்ளது.

பொது தேர்வு மே மாதம் என்பதால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தொடந்து பயிற்சி அளிக்க போதிய அவகாசம் கிடைத்துள்ளது.

See also  அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு..!