தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘புதிய தொழில் கொள்கை’ மற்றும் புதிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கைகள் விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த இரண்டு தொழில் கொள்கைகளும் இன்று காலை சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.

மேலும், தமிழகத்தில் 28 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் தொடங்க 27 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாக உள்ளது.

இவைத்தவிர ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்.

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையின் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது.

See also  நடிகர் விஜய் தளபதி 65 திரைப்பட பூஜையில் பங்கேற்றார்