தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,970ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 97,668 பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநில அரசு டாஸ்மாக் கடைகளில் நேரத்தை மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

மதுக்கடைகளில் குடிமகன்கள் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மது வாங்கி செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தால் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட கொரோனா ஊரடங்கை அடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டு பலமுறை செய்யப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழக்கமான நேரத்தில் டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மாநில அரசு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

See also  பூமியை தோண்ட தோண்ட கிடைக்கும் மர்ம கற்கள்..! வைரம் என்று நம்பிய மக்கள்..!