திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலையின் பின்புற பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி இருக்கிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் லிங்க வடிவிலான முருகர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக திருப்பத்தூர் பகுதிகளில் கனமழை பெய்த காரணமாக, தற்போது ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

ஏலகிரி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அத்தனாவூர் ஏரி நிரம்பி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஆறு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தினால் வறண்டு கிடந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஞாயிற்று (ஜூலை 4) கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வம் அதிகரித்து நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். ஞாயிற்று (ஜூலை 4) கிழமை ஊரடங்கு காரணமாக ஜலகாம்பாறை சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து, யாரும் உள்ளே நுழையக் கூடாது என்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும் ஞாயிற்று (ஜூலை 4) கிழமை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து ஆனந்த குளியல் போட்டனர்.

See also  IPL 2021: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி