- தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கபட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும்,வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- இந்த இ-பாஸ் முறையானது சில மாதமாக பொருளாதாரம் பதிப்படையக்கூடாது என்பதற்காக தளர்வு செய்யப்பட்டு இருந்தது.
- தமிழ்நாட்டில் கொரோன பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக இந்த இ-பாஸ்வணங்குவது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- சுற்றுலா தலங்களான நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பாங்கான தமிழ்நாட்டு பகுதிகளுக்கு பயணிக்கும் மக்கள் கட்டாயமாக இ பாஸ் பதிவு செய்திருக்க வேண்டு.
- எனவே, வெளி நாட்டிலிருந்து தமிழகம் வருவோர்,வெளி மாநிலங்கள், தமிழகத்திற்குள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் ஆகியோர், எவ்வாறு தங்களின் பதிவுகளை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது.
- கடந்த வருடம் இ- பாஸ் வெப்சைட் எந்த மாதிரி நடைமுறையில் இருந்ததோ அதே போல் இப்போதும் பாஸ் எடுக்கும் நடைமுறை இருக்கிறது.
- இதற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்க்கில் தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது. இங்கு தங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
- பின்பு ஓடிபி நம்பர் உங்களது தொலைபேசி எண்ணுக்கு வரும். இந்த ஓடிபி நம்பரை வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
- வழிப்பயணம் செல்பவர்கள் தனிநபரா அல்லது குழுவாக சாலை பயணம் செய்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்.
- அதில், நீங்கள் தமிழகத்திற்குள் , கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக சாலை வழியாக வருவதாக இருந்தால், அதை தேர்வு செய்ய வேண்டும்.
- ஒருவேளை, ரயில் அல்லது விமானம் மூலமாக வருவதாக இருந்தால் அதற்கு தனியாக ஒரு தேர்வுகள் இருக்கும் அதை செய்வதற்கு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.
- மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொழிலாளர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இ பாஸ் பெற வேண்டும் அல்லவா, அதற்கு தனியாக ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில் நீங்கள் எந்த ஆப்ஷனை தேர்வு செய்கிறார்களோ அங்கு மற்றொரு பக்கம் விரிவடையும்.தமிழகத்திற்குள் சாலை வழியாக வருகிறேன் என்ற ஆப்ஷன் கிளிக் செய்தவுடன் நீங்கள் செல்வதற்கான என்ன காரணம் என்ற கேள்வி முதலில் வரும். இறப்பு அரசு டெண்டர் விவகாரம், திருமணம், அரசுப் பணிகளை மேற்பார்வை செய்தல், மருத்துவ அவசரம், சொத்து பதிவு உள்ளிட்ட பணி நிமித்தமாக வருதல், சுற்றுலா ஆகிய காரணங்கள் கொடுக்கப்படிருக்கும்.
- இதில் எதுவும் இல்லாவிடில் பிற காரணங்கள் என்னவென்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதை தேர்வு செய்ய வேண்டும். வழிபயத்தை மேற்கொள்ள எத்தனை பேர் என்பதையும் விண்ணப்பதாரர் பெயர், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் பெயர், விண்ணப்பதாரர் தவிர மற்ற பயணிகள் எண்ணிக்கை, எங்கு செல்ல வேண்டும் , விண்ணப்பதாரரின் வயது,பாலினம், விண்ணப்பதாரரின் அடையாள சான்றிதழ் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் அதில் ஏதாவது ஒன்றை உங்களது அடையாள சான்றாக சமர்ப்பிக்கலாம்.பின்பு அந்த அடையாள சான்றிதழை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கவேண்டும்.
Live Tamil News cinema news tamil covid 19 e-pess epess google tamil news latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil
