முகக்கவசம் அணிவதன் அவசியத்தை கூறும் குறும்படம் I Can’t Breathe

கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்றும் பலர் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதை காண முடிகிறது. முகக்கவசம் அணியாவிட்டால் எத்தகைய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை விழிப்புணர்வு குறும்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் காகா. முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த குறும்படம் I Can’t Breathe என்ற தலையில் வெளியாகி வரவேற்பை பெற்று உள்ளது.

See also  Top 10 தமிழ் பக்தி பாடல்கள்