ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்திருக்கிறார். இவருக்கு அடுத்து குத்துச் சண்டை போட்டியில் லாவ்லினா இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.

P.V.Sindhu

அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெள்ளி பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்கின் வட்டு எறிதல் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த குரேஷிய வீராங்கனை 63.75 சராசரி தான் பெற்று இருக்கிறார். ஆனால், வட்டு எறிதல் குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 64 சராசரி பெற்று இருக்கிறார்.

இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டியிலும் இதே அளவில், அதாவது 64 சராசரியுடன் வட்டு எறியும் பட்சத்தில் வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைப்பது உறுதி. இதற்கான இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

Amit Panghal

ஆடவர் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டி டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் (52 கிலோ) ஒலிம்பிக்கில் 1-4 என்ற கோல் கணக்கில் கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற யுபெர்ஜென் மார்டினெஸிடம் தோல்வியடைந்து, காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் கொலம்பியாவின் இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் வேகத்தால் தோற்கடிக்கப்பட்டார். இந்த தோல்விக்கு பிறகு இந்திய குத்துச்சண்டை வீரரின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

Atanu Das
ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் தோல்வி அடைந்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் பிரிவுக்கான வில்வித்தையின் காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ்யும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்காரு புருகாகாவும் மோதினார். இந்த போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில்புருகாவா 6-4 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸை வீழ்த்தினார். இந்த தோல்விக்கு பிறகு இந்திய வில்வித்தை வீரரின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

ஒலிம்பிக் போட்டி மகளிா் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டா் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியாவின் லவ்லினா போரோகைன் வெண்கல பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளாா்.

See also  வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் வீட்டிற்கே வரும் மருந்து