Dark Mode Light Mode
 " டான் "  திரைபடக்குழு.....
இந்தியா Vs இங்கிலாந்து – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
தும்பைப்பூவின் மருத்துவ குணங்கள்

இந்தியா Vs இங்கிலாந்து – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. பிப்ரவரி – 5 ஆம் தேதி  (நாளை)இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவின் சாதனைகள் என்ன என்பதை பார்ப்போம்.

1934 ஆம் ஆண்டில்  இருந்து டெஸ்ட் போட்டிகள்  நடந்து வருகின்றன. சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இதில் இந்திய அணி 14 போட்டியில்  வெற்றியும், 6 போட்டியில்  தோல்வியும் அடைந்துள்ளது. மேலும் ஒன்றில் டையும், 11 போட்டிகளில் சமநிலையிலும்  முடிந்துள்ளது.

Advertisement

1952 இல் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்துக்கு  இடையே நடந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்தப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இங்கிலாந்து அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  9 டெஸ்டில் விளையாடி 3 இல் வெற்றியும், 5 இல் தோல்வியும், ஒரு போட்டியை சமன் செய்துள்ளது.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை, மூன்று சதம் பதிவாகியுள்ளது. இது  இம் மைதானத்தின்  சாதனையாக கருதப்படுகிறது.  2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கருண் நாயர் 303 ரன்களும் குவித்தனர்.சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த பெருமை வீரேந்திர சேவாக்கையே சேரும். 2008ல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 304 பந்துகளில் 319 ரன்களை விளாசினார். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் கருண் நாயர் 303 ரன்களும் குவித்தனர்.

கடைசியாக 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. சென்னையில் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய அணி தோற்றதில்லை. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்னையில் 10 டெஸ்டில் விளையாடி 5 சதம் உள்பட 970 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் சேப்பாக்கத்தில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்தது சுனில் கவாஸ்கர், அவர் மொத்தம் 1018 ரன்களை எடுத்துள்ளார்.

அனில் கும்பளே சேப்பாக்கத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர். இவர் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 7 விக்கெட்டை எடுத்தார். 1988 ஆம் ஆண்டு சென்னையில்  இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையே நடந்த டெஸ்டில் இந்திய அணியில் அறிமுகமான  சுழற்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி இரு இன்னிங்சையும் சேர்த்து 136 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை எடுத்தார்.

2008 ஆம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த  போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 387 ரன்கள் இலக்கை இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் சதம், சேவாக், காம்பீர், யுவராஜ்சிங் ஆகியோரின் அதிரடியாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தியாவில் அதிகபட்ச  ரன் சேசிங்கும் சாதனையையும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

Previous Post

 " டான் "  திரைபடக்குழு.....

Next Post

தும்பைப்பூவின் மருத்துவ குணங்கள்

Advertisement
Exit mobile version