ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா அணிக்கு 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

இதில் ஜெர்மனி அணியை எதிர்கொண்ட இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலே ஜெர்மனி தனது கணக்கை தொடங்கி முன்னிலை வகித்தது. ஆனால் இரண்டாவது கால் ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி 16 ஆவது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அதன் பின்னரே ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 26 ஆவது நிமிடத்தில் இந்தியா அணி மேலும் ஒரு கோல் போட்டது. இதனால் இரண்டாம் கால் பாதியில் ஜெர்மனி 3 இந்தியா 2என்ற நிலையில் இருந்தபோது இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 3 க்கு 3 என்று சமன் ஆனது.

31 மற்றும் 34 ஆவது நிமிடத்தில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டது இந்தியா 5 க்கு 3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி கால் ஆட்டத்தின் 47 ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஜெர்மனி நான்காவது கோல் அடித்தது. இருப்பினும் கடைசி ஐந்து நிமிடத்தில் கோல் அடிக்க முடியாமல் ஜெர்மனி 5 க்கு 4 என்ற கோல் கணக்கில் வெண்கலப் பதக்கத்தை தன் வசப்படுத்தியது. இதன் மூலமாக 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது வரை இந்தியா ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில், 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.