இன்றைய சூழலில் வங்கிகளில் கார் லோன் வாங்குவது மிக எளிதாக மாறிவிட்டது.தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.

மேலும் தற்போது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி,எந்த வங்கியில் வட்டி குறைவு, செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

அந்த வகையில் நாம் சில முன்னணி வங்கிகளில் எவ்வளவு வட்டி, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பது பார்ப்போம்.

கார் வாங்க லோன்

கொரோனா காலகட்டத்தில் அனைத்து வகையான கடன்களையும் ஆன்லைனிலேயே அப்ளை செய்யும் வசதியை உருவாக்கி உள்ளார்கள். இதனால் நாம் கடன்களை செலுத்த வங்கிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வங்கி கட்டணங்கள் எவ்வளவு, ஏதேனும் சலுகைகள் உண்டா, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு, இணையதளத்தில் பதிவு செய்தால் போது வங்கியாளர்களே வீடு தேடி வந்து ஆவணங்களை பெற்று கொள்கிறார்கள். இதனால் லோனில் கார் வாங்குவது மிகவும் எளிமையாகி விட்டது.

ஹெச்டிஎஃப்சி வங்கி & எஸ்பிஐ

ஹெச்டிஎஃப்சி வங்கியில் கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.65% ஆக இருக்கிறது.இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். ஷோரூம் விலையிலேயே 100% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்.

எஸ்பிஐயில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது. . வட்டி விகிதம் வருடத்திற்கு 7.70% ஆக இருக்கிறது.

இந்தஸிந்த் வங்கி & கோடக் மகேந்திரா வங்கி

இந்தஸிந்த் வங்கியில் வட்டி விகிதம் 8.65% ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். ஷோரூம் விலையிலேயே 85% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்..

கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 5 வருடங்களாகும்.ஷோரூம் விலையிலேயே 90% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்.

See also  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஐசிஐசிஐ வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

ஐசிஐசிஐ வங்கியில் 7.90% (fixed) வட்டி விகிதமாக உள்ளது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். ஷோரூம் விலையிலேயே 100% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்.

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் 8.70%(fixed) ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 100% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.55% (floating) வட்டி விகிதமாக உள்ளது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும்.

இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.40% (floating) ஆக உள்ளது.இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும்.

இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

ஆந்திரா வங்கி & சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.25% (floating) ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும்.

இவ்வங்கியில் 90% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

ஆந்திரா வங்கியில் வட்டி விகிதம் 7.40% (fixed) ஆக இருக்கிறது. கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

ஐடிபிஐ வங்கி & ஃபெடரல் வங்கி

ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் 9.20% (fixed) ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். ஷோரூம் விலையிலேயே 90% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்..

ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதம் 8.50% (fixed) ஆக இருக்கிறது. இந்த வங்கியில் கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். ஷோரூம் விலையிலேயே 90% கடனையும் வங்கியில் பெற்று கொள்ளலாம்..

பேங்க் ஆப் மஹாராஷ்டிரா & கார்ப்பரேஷன் வங்கி

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் வட்டி விகிதம் 7.55% (floating) ஆக இருக்கிறது. கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

See also  சந்திராஷ்டமம்

கார்ப்பரேஷன் வங்கியில் வட்டி விகிதம் 7.40% (floating) ஆக இருக்கிறது. கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். இது எக்ஸ் ஷோரூம் விலையில் 85% வரை கடனாக பெறலாம்.

பேங்க் ஆப் இந்தியா & யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

தற்போது பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.45% ஆக இருக்கிறது. கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

அதேபோல் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 8.60% (floating) ஆக இருக்கிறது. கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாக நிர்ணித்து இருக்கிறார்கள். இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

இந்தியன் வங்கி & பேங்க் ஆப் பரோடா

இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் 9.65% (floating) ஆக இருக்கிறது. கடனை செலுத்த கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 85% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் 7.35% (floating) ஆக இருக்கிறது. கடனுக்கான கால அவகாசம் 7 வருடங்களாகும். இவ்வங்கியில் 90% வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடன் ஆன் தி ரோடு மதிப்பில் தரப்படுகிறது.