Homeசெய்திகள்வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை - SBI வங்கி

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை – SBI வங்கி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக வீட்டுக் கடன்கள் 6.70% வட்டிக்கு வழங்கப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஒரிஜினல் வட்டி விகிதம் அமல்படுத்தப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எனவே, ஒரிஜினல் வட்டி உயர்த்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகைக்கால சலுகையாக மார்ச் 31ஆம் தேதி வரை 6.70% வட்டி சலுகை வழங்கப்பட்டது. மீண்டும் பழையபடி ஒரிஜினல் 6.95% வட்டி விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை” என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். அதாவது, வீட்டுக் கடன்கள் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 0.05% வட்டிச் சலுகை வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version