இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளானது. கோயம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயாரிப்பில் புதிய எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரூ.1.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எஸ்விஎம் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெலிவரி வருகிற மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராண்ட் வேரியண்ட் மற்றும் எலைட் வேரியண்ட் மட்டும்தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மோகன்ராஜ் ராமசாமி என்பவரால் எஸ்விஎம் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய அதிவேக பிராணா எலக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.25,000 வரை தள்ளுபடி சலுகைகளை தற்சமயம் வழங்கி வருகிறது. இச்சலுகையை பெற வாடிக்கையாளர் 10 மரக்கன்றுகள் வெவ்வேறான பகுதிகளில் நட்டு பின்னர் அதனை தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு மாதத்தவணை திட்டமாக ரூ.5,200 என்பதையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இது 3 வருட காலத்தை கொண்டுள்ளது. பிராணா பைக்கில் எலக்ட்ரிக் அதிநுட்பமான ஏர்-கூல்டு பிஎல்டிசி எலக்ட்ரிக் மோட்டார் 4.32 கிலோவாட்ஸ் மற்றும் 7.2 கிலோவாட்ஸ் லித்தியம்-இரும்பு பேட்டரி தேர்வுடன் எஸ்விஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.