• ஜியோவின் ஐ.பி.எல் 2021-ம் ஆண்டுக்கான ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
  • அதன்படி, ரிச்சார்ஜ் செய்வதன் மூலம்  நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவை , 401 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டதின்வாயிலாக பயனடையலாம் .
  • ஜியோ கொடுக்கப்படும்  30 நாள் வேலிட்டிட்டியில்  மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு  இந்த திட்டத்தின் மூலம் ஜியோ வழங்குகிறது.

10 ஜிபி இலவச டேட்டா

  • 2021-ம் ஆண்டு நடைபெற்று வருகின்ற  கிரிக்கெட் தொடர்களை கண்டுகளிக்க 10 ஜிபி இலவச டேட்டாவுடன், ஓராண்டுக்கான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவையும் கொடுக்கிறது.
  • இந்த சலுகையானது குறிப்பிட்ட ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ நிறுவனம் வழங்கிவருகிறது.
  • மேலும், பிரத்யேகமாக கிரிக்கெட் செயலி ஒன்றை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த செயலி இலவசமாக கிடைக்கும்.
  • இந்த செயலியில் ஜியோ யூசர்கள் இலவசமாக கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்து கொள்வதுடன், அதில் நடத்தப்படும் புதிர் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வெல்லலாம்.

ஜியோவின் ரூ.401 திட்டம்

  •  ஜியோ ப்ரீப்பெய்ட் யூசர்களுக்காக அந்நிறுவனம் 401ரூபாயில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், இந்த திட்டத்தினை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம்  நாள்தோறும் 3ஜிபி டேட்டா கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தில் 30 நாள் வேலிட்டிட்டியில் மொத்தமாக 96 ஜிபி வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்குகிறது.
  • மேலும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், ஓராண்டுக்கு ஜியோ தொலைக்காட்சி மற்றும் சினிமா, ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஆகியவற்றையும் கண்டுமகிழலாம்.

ஜியோவின் ரூ.2,599 திட்டம்

  • ஜியோ மொபைல் சந்தாதாரர்களுக்கு 10 ஜிபி இலவசமாக 2,599 ரூபாய் ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தின் மூலம் வழங்குகிறது. அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெடாக நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை கொடுக்கப்படுகிறது.
  • ஒருவருடத்திற்கு  (12 மாதங்கள்) வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீப்பெய்ட் திட்டத்தை தேர்வு தேர்வு செய்து பயனாளர்கள்  ஓராண்டுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோவின் ரூ.598 திட்டம்

  • ஜியோ மொபைலில்  நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவுடன், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ்  என்று 598 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டம்  வழங்குகிறது .
  • இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா வழங்குவதில்லை. ஆனால்,ஓராண்டுக்கு  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை  இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
See also  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? தீர்வு என்ன..?

ஜியோவின் ரூ.777 திட்டம்

777 ரூபாய் ஜியோ ப்ரீப்பெய்ட்  என்ற புதிய இத்திட்டத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் 84 நாட்கள் வேலிடிட்டி என்ற திட்டம் அடிப்படையில்  ஹாட்ஸ்டார் சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுவதால் பயனாளர்கள் இந்த திட்டத்தில் கிரிக்கெட் மேட்சுகளையும் இலவசமாக பார்த்து மகிழலாம்.