தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பில் மொத்த காலிப் பணியிடங்கள் 50 என கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.09.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணுடன் இணைத்து ஒரு முறை பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் பதிவு செய்தால், ஐந்து வருடங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை

இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்: TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர் : Assistant Public Prosecutors, Grade-II

மொத்த காலிப்பணியிடங்கள் : 50

கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். கட்டாயம் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ. 56,100 முதல் – ரூ.1,75,500 வரை

வயது வரம்பு : 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் முதல் நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு 06.11.2021 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் முழு விவரங்களை www.tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

See also  வாக்குச்சாவடிக்கு விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க