மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிபணி இடங்கள்: 572

நிர்வாகம் பெயர் : Military Engineer Services

வேலையின் விவரம்: Draughtsman – 114

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ.1,12,400 வரை

கல்வி தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலையின் விவரம்: Supervisor – 458 

மாதச் சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ .1,12,400 வரை

கல்வித் தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல், பொது நிர்வாகவியல் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் வயது 18 முதல் 30 குள் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.mesgovonline.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி தேதி: 12.04.2021

மேலும் முழுவிபரங்களை அறிய www.mesgovonline.com அல்லது https://www.mesgovonline.com/mesdmsk/advt.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

See also  AIASL Recruitment 2022 – 45 Handyman Post