யூடியூபர் பப்ஜி மதன் இன்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டு வருக்கிறது. மதனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் சேலத்தை சேர்ந்த மதன் குமார் ”டாக்சிக் மதன் 18” என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மதன் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரின் யூடியூப் சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகமாகி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சேர்ந்துள்ளார்கள்.

பெண்களை ஆபாசமாக பேசி எல்லையை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது மேலும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். பப்ஜி மதன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இந்நிலையில், முன் ஜாமீன் கோரி மதன் சார்பில் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவாகியுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் வாதாடினார்.

இதற்கிடையே, மதனுக்கு உதவியாக இருந்த அவரது மனைவி நேற்று கைது செய்யப்பட்டார். இவரை ஜூன் 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மதனின் ஆடியோக்களை கேட்கத் தொடங்கிய நீதிபதி தண்டபாணி சில நிமிடங்களிலேயே மதனின் பேச்சு காதுகொடுத்து கேட்கமுடியாத அளவிற்கு இருப்பதாக கூறினார். மேலும் இவர் மதனின் வழக்கறிஞரிடம் யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மதனின் வக்கீல், வழக்கிற்காக சில பகுதிகளை மட்டும் கேட்டதாக பதிலளித்தார். அதற்கு நீதிபதி, அந்த பதிவுகளை முழுமையாக கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், தர்மபுரியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த மதனை போலீசார் இன்று கைது செய்தனர். மதனின் முன் ஜாமின் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

See also  ராயல் என்ஃபீல்டு பைக் புதிய நிறங்களில் அறிமுகம்