உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சள் பூஞ்சை..!

- Advertisement -

இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை அடுத்து தற்போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சை பூஞ்சை பரவி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று இந்தியாவில் பரவி வருவதாகவும், இந்த பூஞ்சை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே மஞ்சள் பூஞ்சை காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவு பொருட்கள் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டெராய்டை அதிகமாக பயன்படுத்தினால் இந்நோய் தொற்று ஏற்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

கருப்பு, மஞ்சள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக சோர்வு, பசியின்மை, உடல் எடை குறைவு, ரத்தம் கசிதல், உடல் உறுப்புகள் செயல் இழப்பு போன்றவைகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox