புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த காய் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. புடலங்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று புடலங்காயும் நாட்டுக்காய் வகையை சார்ந்தது. புடலங்காய் கூட்டு, புடலங்காய் வேர்க்கடலை சேர்த்த பொரியல், புடலங்காய் தொக்கு என பல வகை டிஷ்கள் செய்து சாப்பிடலாம்.

நாய்ப்புடலை, கொத்துப்புடலை, பன்றி புடலை, பேய்ப்புடலை என பல வகை புடலங்காய்கள் இருந்தாலும், பலரும் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதில்லை. இவர்கள் புடலங்காயை மறந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். புடலங்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதைப் பற்றிப் பார்ப்போம்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாகும்.

அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காயை சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனை தீரும். மேலும் இதனால் பசியும் உண்டாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு அளித்து ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளும் சரியாகிவிடும்.

காய்ச்சல் உள்ளவர்களுக்கு புடலங்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் குணமாகி, இயற்கையாக உடல்நலம் சீராகத் தொடங்கும்.

நம் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை சிறுநீராகவும், வியர்வையாகவும் வெளியேற்றும் தன்மையை புடலங்காய் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுபாட்டுக்குள் வரும். மேலும் புடலங்காய் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

கீழாநெல்லி போன்று புடலங்காய் இலையும், புடலங்காயும் மஞ்சள் காமாலைக்கு மருந்தாக பயன்படுகிறது . மேலும் புடலங்காய் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. மஞ்சள் காமாலையால் நோய் எதிர்ப்பு சத்து குறைந்தவர்களுக்கு தீர்வு அளிக்கும் வகையில் ஆக்ஸிஜனேற்ற திறனை புடலங்காய் அதிகரிக்க செய்கிறது.

கொத்துமல்லி விதைகளுடன் புடலங்காய் இலையை நசுக்கி சாறை எடுத்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மஞ்சள் காமாலைக்கு புடலங்காய் சாறும் குடிக்கலாம்.

 

See also  வெற்றிலையின் மருத்துவ நன்மைகள்