Contact Information

Theodore Lowe, Ap #867-859
Sit Rd, Azusa New York

We Are Available 24/ 7. Call Now.

மாஸ்டர் படத்தை ஒன்றரை வருட போராட்டத்துக்கு பிறகு உங்களுக்கு வழங்குகிறோம். தயவு செய்து இன்டர்நெட் காட்சிகளை பகிராதீர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் ட்ரெய்லர் குறித்த எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.

கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களைக் கடந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மாஸ்டர் படம் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனால், படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share: