நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா  காலத்திலும் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தடைகளை மீறி இன்று உலகெங்கும் பல திரையருங்களில் வெளியாகி மிக சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.இளைய தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடித்த இத்திரைப்படமானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் மாஸ் ஹிட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் வில்லத்தனமும் பல வசனங்களும் விஜய் ரசிகர்களை  ஈர்க்கும்  வகையில் உள்ளது.  அதே நேரத்தில் தளபதிக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் தனது நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தின் முதல் பகுதியில் நடிக்கும் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் பதியும்  அளவிற்கு சிறப்பு மிக்கதாக இருந்தது. மேலும் மாளவிகா தளபதியுடன் இணைத்து நடித்த காட்சிகள் குறைவாக  இருந்தாலும்  கலக்கலாகவும் சிறப்பாகவும் இருந்தது.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை தேடித்தரும் என்று ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.