நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை குறிக்கும் வகையில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அம்ரித் மோகோத்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்திய அறிவியலாளர்கள் ஒருபோதும் ஏமாற்றம் அளிப்பதில்லை என்று கூறினார்.

கொரோனா தொற்றினால் இந்தியா பாதிப்படைந்த போது உரிய நேரத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அறிவியலாளர்கள் 2DG நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததை அவர் சுட்டிக்காட்டினார். உலகின் பல்வேறு நாடுகளும்கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும் நமது ஆராய்ச்சியாளர்கள் அதனை சாத்தியப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் 75 மலைப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் அடங்கும். மேலும் 1971ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகம் ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார். அப்போது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அனைவருக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சுயச்சார்பு இந்தியா திட்டத்தை நோக்கி மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

See also  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை