தென் ஆப்பிரிக்காவில் பூமியை தோண்டும் போது சில மர்மக்கற்கள் கிடைத்துள்ளது. அதனை வைரம் என்று நம்பி அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகிறார்கள்.

கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் உள்ள குவாஹலதி கிராமத்தின் புறநகரில் ஒரு கால்நடை வளர்ப்பவர் சில மர்ம கற்களைக் கண்டுள்ளார். இந்த கற்களை வைரம் என்று நம்பிய அவர், கிராம மக்களிடம் இது பற்றி கூறியுள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர்.

அந்நாட்டு அரசாங்கம் அந்த கற்களை சேகரிப்பதற்காகவும், பகுப்பாய்வு செய்வதற்காகவும் புவியியல் மற்றும் சுரங்க வல்லுநர்கள் குழுவை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இந்த கற்கள் வைரங்கள் அல்ல, இங்குள்ளவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அங்கு அதிகாரிகள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எடுத்து கூறி, பூமிக்கு அடியில் கற்களை தோண்டும் மக்களை அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் மக்கள் கற்களை தோண்டியெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கற்கள் பயனற்றவை என்று அரசாங்கம் எச்சரித்து இருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் அந்த இடத்திற்கு சென்று பூமியை தோண்டி நிறைய கற்களை எடுத்துள்ளனர்.

Mysterious stones in SA

 

அந்த கற்களை கண்டுபிடித்த 40 வயதான மகுதுலேலா பேசுகையில் , ” உண்மையிலே இவை விலை உயர்ந்த கற்கள் தான். இதனை வைத்து நான் கார், வீடு வாங்கப் போகிறேன், என் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்புவேன்,” என்று கூறுகிறார். இதே போல் அந்த பகுதியில் கற்களை தோண்டி எடுத்த பலரும், அவை வைர கற்கள் என்றும், இந்த கற்களால் தங்களின் ஏழ்மை நிலை மாறக்கூடும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

See also  பொதுமக்கள் கேட்ட கேள்வியால் பிரச்சாரத்தில் இருந்து நழுவிச் சென்ற அதிமுக வேட்பாளர்