உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர் கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோதி இந்த கவுன்சில் கூட்டத்தில் காணொளி மூலம் நேற்று உரையாற்றினார். சர்வதேச கடல் வழித் தடங்களை தீவிரவாதம் மற்றும் காலத்துக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென்று அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார். கடல் சார்ந்த வாணிபம் மற்றும் வர்த்தகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் இதற்கான தடைக் கற்களை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கடல்சார் வர்த்தகத்தில் இந்தியா காலம் காலமாக ஈடுபட்டு வருகிறது இன்று குறிப்பிட்ட பிரதமர் பாரம்பரியம் மிக்க இந்திய கடல் வாணிபம் பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் கடல் வழித் தடங்கள் பல வகையிலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் கடத்தல் தீவிரவாதம் போன்ற சமூக விரோத செயல்களும் கடல் சார்ந்த வழித்தடங்களில் நடைபெறுகிறது என்றும் கூறினார். இதனை சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

See also  TNPSC தேர்வு வாரியத்திற்கு புதிய கட்டுப்பாட்டு செயலாளர் நியமனம்..!