தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10 ஆம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தடைகள் எதுவும் இன்றி செலயல்பட தமிழக அரசு
அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

  • மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.
  • நாளை முதல் தொழிற்சாலைகளில் இயக்கப்படும் வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர் களைஅழைத்து வர 4 சக்கர வாகனங்களை பயப்படுத்த வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.