கூகுள் பே என்னும் ஆப் ஐ பயன்படுத்தி மக்கள் தங்களின் பணத்தை தேவை என்பவர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம். கூகுள் பே ஆப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ளவர்களுக்குள் மட்டுமே பணம் அனுப்ப முடியும். தற்போது அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவிற்கு இனி பணம் அனுப்பலாம் என்று தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து பண பரிவர்த்தனை செய்ய கூகுள் பே நிறுவனம் வெஸ்டர்ன் யூனியன் போன்ற ஒரு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருந்துமே இனி இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம் என்ற வசதி விரைவில் கொண்டுவர உள்ளது.

வெஸ்டர்ன் யூனியன் அல்லது வேஸ் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பலாம் என்றும் இதில் ஒரு சிறிய தொகை கட்டணமாக பணம் அனுப்புபவர்களிடமிருந்து மட்டும் பெறப்படும் என்றும் முழு தொகையானது பணம் பெறுபவர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வசிப்பவர்களுக்கு அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சுலபமாக பணம் அனுப்பலாம். இந்த நடைமுறையானது கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.