தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிய கலெக்டர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது TNPSC அமைப்புக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு செயலாளராக உமாமகேஸ்வரி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றிய உமா மகேஸ்வரி அவர்கள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பல்வேறு அரசு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சட்டம் 1954-ன்படி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றிய உமா மகேஸ்வரி, டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தின் செயலாளராக பணியாற்றிய நந்தகுமாருக்கு பதிலாக தற்போது TNPSC அமைப்புக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.