அஜித்தின் ’வலிமை’ அப்டேட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

  • அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் போனி கபூருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
  • ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு போனி கபூர், அஜித்,ஹெச்.வினோத் கூட்டணி மறுபடியும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளார்கள்.
  • அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
  • மேலும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாள் மே 1 ஆம் தேதி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிகுந்து இருக்கிறார்கள்.
  • நேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. அதைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்தையும் எச். வினோத் இயக்கியுள்ளார்.
  • வலிமை படத்தில் அஜித் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளாராம் அஜித். இந்த படத்தில் அஜித் பெயர், அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது.
  • இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன்.மேலும் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை இந்த படத்திற்கு எழுதி உள்ளாராம்.
  • இந்த பாடல் ‘ஆலுமா டோலுமா’ பாடலைப் போலவே இந்த ஆண்டின் தெறிக்கும் பாடலாக இருக்கும் என கூறுகிறார்கள்.
0 Shares:
You May Also Like
review1
Read More

குட்டி ஸ்டோரி மூவி விமர்சனம்

நான்கு சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் – கெளதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நாலன் குமாரசாமி ஆகியோர் குட்டி ஸ்டோரி…
Read More

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பிரம்மாண்டம்

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம், கமல்ஹாசன் திரும்பவும் இந்தியா தாத்தாவாக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார்…
Read More

கேங்கர்ஸ் டிரெய்லர் – Gangers Official Trailer

Gangers Official Trailer மற்றும் கேங்கர்ஸ் டிரெய்லர் – இந்த இரண்டு சொற்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன! வடிவேலு…
Read More

குபேரா (Kuberaa) அதிகாரபூர்வ ட்ரைலர் – Kuberaa Official Trailer

🎬 குபேரா அதிகாரபூர்வ ட்ரைலர் (தமிழ்) – தனுஷின் அதிரடி அவதாரம் தனுஷ் தனது கேரியரில் முதன்முறையாக மிகச் சிக்கலான, இருண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்…