இரண்டாவது அலையாக இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக வீசத்தொடங்கியிள்ளது. மேலை நாட்டு மக்கள் பொருளாதார வசதியிலும் வணிக ரீதியாக உயர்ந்து காணப்பட்டாலும் அவர்களும் இந்த கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியவில் புயலைப்போல் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது. இதன் விளைவாக முழு நாட்டிலும் பொது முடக்கம் அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இந்தியாவில் பொது முடக்கம்

ஏற்கனவே இந்தியாவில் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக இந்திய பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதார இழப்பை மீட்டெடுக்க முடியாத நிலைக்கு இந்த பொது முடக்கம் தள்ளப்பட்டு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் 58 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். சிகிச்சையில் 14 பேர் மட்டுமே குண்மடைத்துள்ளனர்.

இதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதன் காரணமாக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படும் என்ற தகவல் காற்றுப்போல் பரவிவருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் வசித்து வந்த வடமாநில மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக தனது சொந்த ஊர்களை நாடிச்செல்ல முடிவெடுத்துள்ளனர்.

கோவை, கரூர், திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் வசித்து வந்த வடமாநிலமக்கள் கொரோனா பொது முடக்க அச்சத்தால் தனது ஊர்களுக்கு செல்ல உள்ளனர். வட மாநில மக்கள் ஹவுரா ரயில் மூலம் தனது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். இதனால் மக்கள் திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர் .

See also  இன்றைய தலைப்பு செய்திகள் -10-08-2021