கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டது.பழைய அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது முடக்கம் ஏற்படுமா, கட்டுப்பாடுகள் விதிகப்படுமா என்ற பயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து உயர் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது போன்ற தீ விபத்தை தடுக்க ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதை தடை செய்துள்ளது. பயணிகள் இரவில் பயணிக்கும் போது செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் போட்டபடி வைத்து விட்டு தூங்கி விடுகிறார்கள் இதன் காரணமாக சூடாகி மீன் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயில் பெட்டிகளில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடுவதை ரயில் துறை தடை செய்துள்ளது.

இரவு நேரங்களில் சார்ஜ் பயனீடுகளை ஆப் செய்ய ரயில் பெட்டிகளில் உள்ள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த உத்தரவு போடப்பட்டது ஆனால் சரியாக அமல் படுத்தப்படவில்லை. இப்போது இந்த உத்தரவை சரிவர பின்பற்ற ரயில்வே துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே துறை இதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

See also  2 முதல் 18 வரை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி