திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்க்காக ‘ஆன்லைன்’ வாயிலாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 90 நாட்களுக்குள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. மேலும், காய்ச்சல், சளி, இருமல் உடல்வலி ஆகியவை உள்ளவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

See also  நேற்று முதல் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு