பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்ஸி போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ஓலா நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை இந்தியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ஓலா நிறுவனம், நெதர்லாந்தில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து வருகிறது, பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையும் அமைக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலை 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலில் உள்ள கிருஷ்ணகிரியில் வரும் என ஓலா நிறுவனம் கூறியுள்ளது.

கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலாவின் இ-ஸ்கூட்டர் ஆலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலைய மதிப்பிட்டின் விலை 2,400 கோடி ரூபாயாகும்.

இது ஆண்டுக்கு 1 கோர் அல்லது 10 மில்லியன் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனை கொண்டதாக இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ,ஈ.வி.க்களின் பயன்பாட்டை ஏற்றுமதி செய்வதற்கும் தனது அரசாங்கம் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பல நகரங்களில், குறுகிய வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வது கடினமாக உள்ள நிலையில் ஓலாவின் இந்த புதிய கண்டுப்பிடிப்பான ஸ்கூட்டர்களை கொண்டு வாடிக்கையாளர்களின் பயணத்தை எளிதாக்கும்.