2011ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது. மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைத் வென்று சாதனைப் படைத்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி களமிறங்கி 50 ஓவர்கள் முடிவில் 276/4 ரன்கள் எடுத்தது. முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்த்தனே 103* (88) ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இலக்கைத் அணியை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் விரேந்திர சேவாக் (0), சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்து கவுதம் கம்பீர், விராட் கோலி (35) இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 83 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து கவுதம் கம்பீர், மகேந்திரசிங் தோனி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 109 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர். மகேந்திரசிங் தோனி சிக்ஸர் அடித்து போட்டியை முடிவுக்கு கொண்டு வந்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.

சிறப்பாக விளையாடி வந்த கவுதம் கம்பீர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 42ஆவது ஓவரின்போது 97 (122) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 91 (79) ரன்களுடன் கடைசிவரைக் ஆட்டகளத்தில் இருந்தார். ஆட்டநாயகனுக்கான விருது மகேந்திரசிங் தோனிக்கு வழங்கப்பட்டது.

 

See also  மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு