தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்ப்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட இந்த மகப்பேறு விடுப்பானது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூலை 1-ம் தேதிக்கு முன்னரே அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், அவர்கள் 365 நாட்களுக்கு மிகாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

See also  வெள்ளைமாளிகையில் அதிபர் ஜோ பைடனுக்கு தொடக்க உரை  எழுதிய - இந்திய வம்சாவளியை சேர்ந்த வினய் ரெட்டி