நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

  • அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன.

அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடியது பல்லி. பல்லி கத்துவது, மற்றும் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

தலை :

  • பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது.
  • தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.

நெற்றி:

  • நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்‌ஷ்மி கடாசம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.
    தலை முடியில் பல்லி விழுந்தால்:
  • பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது..

முகத்தில் பல்லி விழுந்தால்:

  • பல்லி விழும் பலன்கள் முகம் – முகத்தில் பல்ல்வி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும்.

புருவத்தில் பல்லி விழுந்தால்:

  • புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
  • அதுவே கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது அர்த்தம்.

இடது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால்:

  • நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.

வலது கை மற்றும் காலில் பல்லி விழுந்தால்:

  • நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.

பாதத்தில் பல்லி விழுதல்:

  • பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால்:

  • தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க பெருமாம்.

தொடையில் பல்லி விழுந்தால்:

  • தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள் என உணர்த்தும்.

மார்பு மீது பல்லி விழுதல்: (Lizard Falling On Chest)

  • வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப் பெறும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப் பெறும்.

கழுத்தில் பல்லி விழுந்தால்:

  • இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.

பல்லி விழுந்தால் செய்ய வேண்டியவை :

  • நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
  • இல்லையெனில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல்லியின் சிலையை தொட்டு வணங்குங்கள். அந்த நிலையில் சூரியன் மற்றும் சந்திரன் சித்திரத்தையும் காணலாம்…
  • இந்த பல்லிகளை வணங்கினால் வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக் கூடிய சோகங்களை நீக்கி, நன்மை கிடைக்கும்.