மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்

- Advertisement -

சட்ட மன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற செய்தி பரவிக் வருகிறது. இந்த செய்திக்கு மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

இது ஆரம்ப கட்ட ஆலோசனை என்பதால் தேர்தல் சட்டத்தில் இதற்கான திருத்தங்கள் செய்த பின்னரே ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு அமலுக்கு வரும்.

- Advertisement -

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை எண்ணை இணைத்துவிட்டால் தனிநபர் தகவல் திருட்டு, தேர்தல் மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்துப் பேசிய ரவி ஷங்கர் பிரசாத், வாக்காளர் அடையாள அட்டையில் ஆதாரை இணைப்பது என்பது வெறும் சரிபார்ப்பு நோக்கத்திற்காக மட்டுமே தவிர தேர்தல் தொடர்பான தகவல்கள் கசிவு மற்றும் மோசடிகள் நடைபெறாது என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக வாக்காளர் அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார். இதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார்அட்டையை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் தடுக்கவும் பான் கார்டு உடன் ஆதாரை எண்ணை இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளன.

மத்திய அரசு ஆதார் கார்டு உள்ள அனைவரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அவர்களது பான் கார்டை ஆதாருடன் இணைந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox