பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இச்சூழலில் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான வலைத்தளத்தை அதிகமானோர் பயன்படுத்தியதால், இந்த வளையத்தளம் சரிவர இயங்கவில்லை என்கிற புகார்கள் பொதுமக்களிடையே இருந்தது வந்தது.

இதனால் மேலும் மூன்று மாத காலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 30ம் தேதி வரை ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது ஆல விச தொடங்கியுள்ளது. இதனால் வருமான வரித்துறை தங்களது பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் மற்றும் மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதையும் பார்ப்போம்.

ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதை பார்ப்போம்:
  • ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்க வேண்டும்.
  • பிறகு, அதன் முகப்பு பக்கத்தில் இடது ஓரத்தில் `Link Aadhaar’ என்ற மெனு கொடுக்கப்பட்டு இருக்கும், அந்த மெனுவைக் கிளிக் செய்யவும். அதற்கான பக்கம் திறக்கப்படும்.
  • அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும், அங்கு உங்கள் பான் எண்ணைப் பதிவு செய்யவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும், அதையும் பதிவு செய்யவும்.
  • பிறகு ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதிவு செய்யவும். பிறகு அங்கு ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஆதார் கார்டில் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அதற்கான பட்டனைக் கிளிக் செய்யவும். பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான அனைத்து விவரங்களும் தற்போது கொடுத்து முடிந்துவிட்டது.
  • பிறகு வழக்கம்போல் `கேப்சா கோட்’ செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் செய்ததும் `Link Aadhaar’ பட்டனைக் கிளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக தகவல் வரும்.
மொபைல் எஸ்எம்எஸ் மூலம் எவ்வாறு இணைக்கலாம் என்பதை பார்ப்போம்:
  • மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்னுடன் பான் எண்ணை இணைக்கலாம். இதற்காக நீங்கள் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
  • இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். நீங்கள் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> என்ற பார்மட்டில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • எடுத்துக்காட்டாக: UIDPAN 123456789123 KPLM2124M இவ்வாறு டைப் செய்து இருக்கவேண்டும்.