பனங்கிழங்கு நன்மைகள்:-

  • பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
  • ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.
  • பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
    மேலும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.செரிமானமண்டலத்தை சீராக்கி உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.
  • பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.
  • மேலும் பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து சீராக வைக்க உதவுகிறது.
  • மேலும் பனங்கிழங்கை பொடி செய்து அதை பாலுடனோ இல்லை கூழ் செய்தோ சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலுக்கு தேவையான வலுவையும் கொடுக்கிறது.

பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு:-

  • சர்க்கரை நோய் என்பது நமது உடலில் நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருள்களில் உள்ள சர்க்கரை செரிமானம் அடையாமல் அப்படியே இரத்தத்தில் தங்கி விடுவதே ஆகும்.
    பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.இதில் காணப்படக்கூடிய வேதி பொருளானது தேவையான இன்சுலினை சுரக்க செய்கிறது.
  • இரத்தத்தில் தங்கியுள்ள தேவையற்ற சர்க்கரையை கரைய செய்து உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க பயன்படுகிறது.
  • பனங்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனை குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேகவைக்கவும்.அதனுடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் ஹைஜீனிக்காக இருக்கும்.உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.பெரும்பாலும் மண்ணில் விளைவதால் உப்பு சத்து சிறிது காணப்படும்.
  • மற்றொரு முறை வேகவைப்பதோடு அதனை சுட்டு சாப்பிடுவதன் மூலம் அதனோட சுவையும் அதிகரிக்கும்.அதனின் சத்துக்களும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.