கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,புதிய கல்வியாண்டில்  முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் கேள்வி வந்துள்ளது

பள்ளிகள் திறப்பு:

  • தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக  கடந்த 2020 ஆம் ஆண்டு   மார்ச் மாதத்தில் 144  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இதனால் பள்ளி, கல்லூரி அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் நலன் கருதி திறக்கப்படவில்லை . இதனால் வகுப்புகள் இணையதளத்தின்  முலம் எடுக்கப்பட்டன.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும்  இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு 1 முதல் 11ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்கப்பட்டது.
  • ஆன்லைன்  மூலம் வகுப்புகளில் பள்ளி மாணவர்கள்  போதிய அளவு ஆர்வம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
  • வசதி குறைந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு சென்றனர் என  குற்றச்சாட்டுகள் வளர்த்து .
  • வழக்கம் போலவே பள்ளிகளில் நேரடி வகுப்புகள்  தொடங்குவது  மாணவர்களுக்கு   நன்மை  கல்வித்திறனை உயர்த்தும் என கல்வியாளர்கள் குறியுள்ளனர் . இதற்கிடையில் இந்த ஆண்டு  10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
  • எந்த அடிப்படையில்  மதிப்பெண் கணக்கீடு விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.