பென்ஷன் வாங்குபவர்கள் இனி PF ஆபீஸ்க்கு சென்று அலைய தேவையில்லை

- Advertisement -

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தனது பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு (ஓய்வூதியர்கள்) மிகப்பெரிய நிவாரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் வாங்குபவர்கள் இனி பென்சன் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு PF அலுவலகத்துக்கு செல்ல தேவை இல்லை.

இனி பென்சன் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே EPFO இணையதளத்தின் மூலமாக ஈசியாக தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியரின் வங்கி சேமிப்பு புத்தகத்தில் PPO(Pension Payment Order) எண் பதிவிடப்பட வேண்டும். ஓய்வூதியர்கள் தனது வங்கி கணக்கை ஒரு வங்கி கிளையில் இருந்து வேறு ஒரு வங்கி கிளைக்கு மாற்ற வேண்டும் என்றாலும் PPO எண் தேவைப்படுகிறது.

இனி PPO தொடர்பான அனைத்து தகவல்களையும் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற வலைதளத்தின் மூலம் ஓய்வூதியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஈசியாக வங்கிக் கணக்கு எண்ணை வைத்து PPO எண் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

ஓய்வூதியர்கள் தங்களுக்கு தேவையான மிகச் சிறிய தகவல் முதல் மிகப்பெரிய தகவல் வரை எல்லா தகவல்களையும் இணையதளத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். இதற்காக PF ஆபீஸுக்கு சென்று அலையத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox