• நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு ஓட்டி வந்த சைக்கிளின் விலை ரூ. 22,500 மட்டும் தான். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டு தற்போது ஜார்ஜியாவுக்கு பறந்துவிட்டார்.
  • விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததை பார்த்தவர்கள் அதன் விலையையும் , சைக்கிளின் விபரங்களையும் கூகுளில் தேடி கொண்டு இருக்கிறார்கள்.
  • தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டதை விட விஜய் தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

  • கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்த அந்த சைக்கிளை பார்த்தவர்கள் அதன் விபரங்களை தெரிந்து கொள்ள கூகுள் செய்கிறார்கள். விஜய் ஓட்டி வந்த சைக்கிள் மான்ட்ரா நிறுவன தயாரித்தது. இந்த சைக்கிள் 16 கிலோ எடை கொண்டது. அதன் விலை ரூ. 22 ஆயிரத்து 500 ஆகும்.
  • பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததாக நினைத்து அவரை எல்லோரும் பாராட்டினார்கள்.
  • வாவ் வாத்தியின் சைக்கிள் ரெய்டு, மாஸ்டர் ஸ்ட்ரோக். விஜய் சைக்கிளில் வந்து அந்த மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் தன் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டார் என்றெல்லாம் பேசிகொண்டர்கள்.
  • மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமானவர்களை சும்மா விட வேண்டாம் என்று தேர்தல் நாளில் நினைவூட்டினார் என்றெல்லாம் ரசிகர்கள் பேசினார்கள்.
  • விஜய்யை ரசிகர்கள் அவரை புகழ்ந்து கொண்டிருந்த வேலையில் சைக்கிள் ரெய்டு பற்றி விளக்கம் வெளியிடப்பட்டது.
  • வீட்டிற்கு அருகிலேயே வாக்குச்சாவடி இருந்ததால் காரில் வராமல் சைக்கிளில் வந்தார். அவருக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
  • விஜய் அவர் வசதிக்காக சைக்கிளில் வந்து இருக்கிறார். அதற்குள் வேறு மாதிரியான தகவல்களை பரப்பி விட்டுவிட்டார்கள்.
  • வாக்குச்சாவடிக்கு ஒட்டு போட சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய விஜய் அதே வேகத்தில் ஜார்ஜியாவுக்கு கிளம்பிவிட்டார்.
  • விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கயுள்ளார்.
  • இந்த படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ளாததை தெரிந்த ரசிகர்கள் கடுப்பானார்கள்.
  • சென்னையில் பூஜையை முடித்துவிட்டு ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த கிளம்பிவிட்டனர்.
See also  கொரோனா வைரஸ் காரணமாக அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்