நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்த மோடி பசுமலை தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று காலை உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாக சார்பில் மாலை அணிவித்து கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையன வேட்டி சட்டையுடன் கோவில் வாசலில் பொதுமக்களுக்கு கையசைத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று தரிசனத்தை பெற்றார். முதன்முறையாக மோடி மதுரைக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு 11:10 மணிக்கு வருகைதந்தார் .பிரதமர் வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று தேர்தல் பிரசரபொதுகூடத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

பிரதமருடன் முதல்வர் இ.பி.எஸ்,துணை முதல்வர் ஓ.பி.எஸ் ,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தா.மாகா தலைவர் ,ஜி.கே வாசன் பாஜக தமிழக தலைவர் முருகன்(ம)கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரச்சாரபொதுக்கூட்டத்தில் தென்மாவட்டத்திலிருந்து அ.தி.மு.க-பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்த்து ஒரு லச்சத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

See also  எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம்