ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாகோபா என்ற இடத்தில் பகல் 12 மணி அளவில் காணொளலி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் எரிவாயு இணைப்புகளை வழங்குவதுடன் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.

இரண்டாவது கட்ட எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி பேருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட உள்ளது. முதற்கட்ட எரிவாயு இணைப்பு திட்டத்தில் இடம் பெறாத பயனாளிகளை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இந்த இணைப்பு வழங்கப்பட உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எரிவாயு இணைப்பு தர வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்வெஸ் சிங் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

See also  சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...?