முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார்.

தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

மேலும் அனைத்து கட்சி தலைவர்களும், தற்போது ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் முக்கிய அரசியல் பிரபலங்கள் தங்களது காட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகிறார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திங்கள் நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

See also  அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்